டிக்கெட் இல்லாமல் AC பெட்டியில் பயணித்த பயணி.., அபராதம் விதித்த பரிசோதகர் மீது கடும் தாக்குதல்
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணிக்கு அபராதம் விதித்த பரிசோதகரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபராதம்
மும்பையில் உள்ள புறநகர் மின்சார ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஜஸ்பர் சிங் என்பவர் பரிசோதனை மேற்கொண்டார். அப்போது, குளிர் சாதன பெட்டியில் பயணி ஒருவர் உரிய டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துள்ளார்.
அனிகேத் போசலே என்ற பயணி சர்ச்கேட்டில் இருந்து விராருக்கு முதல் வகுப்பு டிக்கெட்டுடன் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
பின்னர், அவரிடம் அபராதம் செலுத்துமாறு டிக்கெட் பரிசோதகர் ஜஸ்பர் சிங் கூறியுள்ளார். ஆனால், அபராதம் செலுத்த முடியாது என்று அவரிடம் அனிகேத் போசலே வாக்குவாதம் செய்துள்ளார்.
இதையடுத்து, போரிவாலி ரயில் நிலையம் சென்றபோது, ரயிலில் இருந்து கீழே இறங்குமாறு பரிசோதகர் கூறியுள்ளார்.
தாக்குதல்
இதனால் ஆத்திரமடைந்த பயணியும், அவருடன் வந்தவரும் சேர்ந்து பரிசோதகரை கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
S. Jasbir Singh A Ticket Collector Was Assaulted By 3Passengers In A Local Train In Mumbai After He Asked For Tickets
— ਹਤਿੰਦਰ ਸਿੰਘ (@Rajput131313) August 17, 2024
After Finding They Are Widout Ticket TC Told Them To Pay Fine, They Torned His Shirt, Injured Him.
People Were Busy Making Video Instead Of Saving Old TC.#shame pic.twitter.com/XyKoA5Vfow
அந்த நேரத்தில் அபராத பணம் ரூ.1500 -ம் காணாமல் போயுள்ளது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸார் வந்து பயணியை ரயிலில் இருந்து கீழே இறக்கி விட்டனர்.
பின்னர், பயணிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, பரிசோதகரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கடிதம் வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |