விமான நிலையங்களுக்கு பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாக வர அறிவுறுத்தல்
போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் விமான நிலையங்களுக்கு பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாக வர உத்தரவு.
ஏர் இந்தியா உத்தரவு
இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நடந்துவரும் நிலையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் இரு நாட்டினரும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் விமான நிலையங்களுக்கு பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் மூன்றடுக்கு பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
இதன் காரணமாக விமான நிலையங்களுக்கு பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு ஏர் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |