வந்தே பாரத் ரயில் உணவில் புழுக்கள் இருந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு
திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு செல்லும் வந்தே பாரத் ரயில் உணவில் புழுக்கள் இருந்ததாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரயில் உணவில் புழுக்கள்
இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசம், திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு தினமும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
குறைவான நேரத்திலேயே விரைவாக பயணம் செய்வதால் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இந்த ரயிலில் டிக்கெட்டுடன் சேர்த்து உணவுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அந்தவகையில் நேற்று திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது பயணிகளுக்கு வழங்கப்பட்ட சிக்கன் குழம்பில் புழுக்கள் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் எழுத்து மூலமாக புகார் அளித்தனர்.
இதையடுத்து, புகாரளித்த பயணிக்கு மாற்று உணவாக நூடுல்ஸ் வழங்கப்பட்டது. இதனால், அதிக கட்டணம் வசூலிக்கும் ரயில் நிர்வாகம் தரமான உணவை வழங்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |