சந்திரயான்-3 ஐ விமானத்தில் இருந்து பார்த்த பயணிகள்! (video)
இந்தியாவின் மூன்றாவது சந்திர ஆய்வுப் பணியான சந்திரயான்-3, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக சென்றது. இது புறப்பட்டதை விமானத்தில் இருந்த பயணி ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டது. இந்த வீடியோ ட்விட்டரில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
சந்திரயான்-3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ வெள்ளிக்கிழமை அனுப்பியது.
இந்த விண்கலனானது பூமியிலிருந்து சந்திரனுக்குமான பயணம் சுமார் ஒரு மாதம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் ஆகஸ்ட் 23 அன்று தரையிறக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவில் இதுவரை அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே தங்களது விண்கலன்களை இறக்கி ஆய்வு பணிகளை செய்து உள்ளன. இந்தியாவும் 4-வது நாடாக அந்த வரிசையில் இடம் பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மேலும் இது சம்பந்தமான ஒரு வீடியோவும் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் வீடியோ
சென்னையில் இருந்து டாக்கா செல்லும் வழியில் இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோவை எடுத்துள்ளார்.
When #aviation meets ?#astronomy!
— The Chennai Skies (@ChennaiFlights) July 14, 2023
A passenger aboard @IndiGo6E 's #Chennai- #Dhaka flight has captured this beautiful liftoff of #Chandrayaan3 ? ?
Video credits to the respective owner.@ISROSpaceflight @SpaceIntel101 @Vinamralongani @elonmusk @ChennaiRains #ISRO pic.twitter.com/YJKQFeBh9b
பகிரப்பட்டதிலிருந்து, வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளையும் எண்ணற்ற லைக்குகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |