தண்ணீருக்கு அடியில் செல்லும் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட நூற்றுக்கணக்கான பயணிகள்: ஒரு பயங்கர சம்பவம்
பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் சுரங்க ரயில் பாதையில் தொழில்நுட்பக் கோளாறு.
நூற்றுக்கணக்கான மக்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கித் தவிப்பு.
பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும், ஆங்கிலக்கால்வாயின் கீழ் செல்லும் ரயில் பாதையில் நேற்று முன்தினம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
அதனால் பல மணி நேரம் மக்கள் ரயிலுக்குள் அமர்ந்திருக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
பின்னர், எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து ரயிலில் பயணித்த மக்கள் ரயிலை விட்டிறங்கி, அருகிலுள்ள சர்வீஸ் சுரங்கப்பாதைக்குள் நுழைந்துள்ளார்கள்.
கடலுக்கடியில் அமைந்துள்ள அந்த சுரங்கப்பாதைக்குள் சுமார் ஐந்து மணி நேரம் செலவிடவேண்டிவந்ததால் சில பயணிகள் அச்சமடைந்துள்ளார்கள், சில பெண்கள் பயந்து அழத்துவங்கியுள்ளார்கள். அது ஒரு பயங்கர அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார் Sarah Fellows(37) என்ற பெண்.
புதன்கிழமை காலை 6.00 மணிவாக்கில், சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த அனைவரும் பத்திரமாக மறுபக்கம் கொண்டு சேர்க்கப்பட்டு, ரயில் சேவை சகஜ நிலைக்குத் திரும்பியதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.