பிரித்தானியாவில் பாஸ்போர்ட் சேவை கடுமையாக பாதிக்கப்படலாம்: பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் யூனியன் எச்சரிக்கை
பிரித்தானியாவில் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள்.
எப்போது வேலைநிறுத்தம்?
இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் பணியாற்றும் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள், ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி முதல், மே மாதம் 5ஆம் திகதிவரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளார்கள்.
அத்துடன் வட அயர்லாந்தின் தலைநகரான Belfastயில் பணி புரிவோரும் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
GETTY IMAGES
பிரித்தானியாவில் பாஸ்போர்ட் சேவை கடுமையாக பாதிக்கப்படலாம்
சரியாக கோடை விடுமுறைக்கு முன்பு பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், பாஸ்போர்ட் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படலாம் என பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் யூனியன் எச்சரித்துள்ளது.
பிரித்தானியா முழுவதிலுமாக, 4,000க்கும் அதிகமானோர் பாஸ்போர்ட் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள். ஆக, நான்கில் ஒரு பணியாளர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை, ஊதியம் முதலான விடயங்களில் காணப்படும் சில பிரச்சினைகள் காரணமாக பாஸ்போர்ட் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளார்கள்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.