பிரித்தானியர்களுக்கு பாஸ்போர்ட் தொடர்பில் ஒரு ஆலோசனை
கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், தங்கள் பாஸ்போர்ட்கள் முறையாக உள்ளதையும், சரியான விசா வைத்திருக்கிறார்களா என்பதையும் உறுதி செய்துகொள்ளுமாறு பயண ஏஜண்டுகள் வலியுறுத்தியுள்ளார்கள்.
பிரெக்சிட்டால் ஏற்பட்ட பிரச்சினை
பிரெக்சிட்டுக்குப் பின், அதாவது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின், விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளுக்கு பயணிப்பதில் பிரித்தானியர்களுக்கு சற்று குழப்பங்கள் உள்ளன.
இதற்கிடையில் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் வேறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
Image: Education Images/Universal Images Group via Getty Images
பயண ஏஜண்டுகள் தெரிவிக்கும் ஆலோசனை
பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் வேறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், உங்கள் பாஸ்போர்ட்கள் காலாவதியாகும் நிலையில் இருந்தால், அவற்றை சரியான நேரத்தில் புதுப்பிப்பது அவசியமாகிறது.
Image: Getty Images/iStockphoto
மேலும், நீங்கள் எந்த நாட்டுக்குச் செல்கிறீர்கள் என்பதற்கேற்ப வெளியுறவு அலுவலகத்தின் பயண ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது நல்லது. எவ்வகை விசா தேவை, பாஸ்போர்ட் காலாவதியாக எவ்வளவு காலம் உள்ளது, விதிகளின்படி எவ்வளவு காலம் இருக்கவேண்டும், பிள்ளைகளுடைய பாஸ்போர்ட்டின் நிலை என்ன, என்பது போன்ற விடயங்களை பயணத்துக்கு முன்பே உறுதி செய்துகொள்வது நல்லது என்கிறார்கள் பயண ஏஜண்டுகள்.
Image: Getty Images