பிரித்தானியாவில் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! தடை விதிக்கப்படலாம் என தகவல்
ஐரோப்பிய யூனியனில் பிரித்தானியா இனி அங்கம் வகிக்காத காரணத்தினால், கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியா இனி ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்காத காரணத்தினால், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் செல்லும் பிரித்தானியா பயணிகள், இங்கிருந்து வெளியேறுவதற்கு முன் தங்களுடைய கடவுச் சீட்டை சரிபார்த்துக் கொள்ளும் படி வெளியுறவு அலுவலகம் எச்சரித்துள்ளது.
இல்லையெனில் தடைவிதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், பிரித்தானியா இனி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இல்லாததால், ஷெங்கன் பகுதிக்குள் (Schengen)செல்லும் எவரும் இப்போது நுழையும் போது அல்லது வெளியேறும்போது கடவுச்ச்சீட்டில் கட்டாயமாக ஒரு முத்திரையைப்(stamp at passport) பெற்றிருக்க வேண்டும்.
அப்படி நீங்கள் ஒருவேளை முத்திரை பெறவில்லை என்றால், பிரித்தானியாவிற்கு மீண்டும் திரும்பும்ப் போது சிக்கல் ஏற்படலாம். Schengen பகுதியில் குறுகிய காலம் தங்குவதற்கு, 90 நாட்கள் விசா இல்லாத வரம்பிற்கு நீங்கள் உள்ளீர்களா? என்பதை எல்லையில் இருக்கும் அதிகாரிகளோ அல்லது காவலர்களோ சரிபார்ப்பார்கள்.
அதன் பின் அதில் முத்திரையை பயன்படுத்துவார்கள். உங்கள் கடவுச்சீட்டில் பொருத்தமான நுழைவு அல்லது வெளியேறும் முத்திரைகள் இல்லை என்றால், நீங்கள் விசா இல்லாத வரம்பை மீறியதாக காவலர்கள் கருதுவார்கள்.
எனவே, Schengen பகுதியில் எப்போது, எங்கு நுழைந்தீர்கள் அல்லது வெளியேறினீர்கள் என்பதற்கான ஆதாரம் தேவைப்படும். இதற்காக உங்கள் கடவுச்சீட்டில் அந்த திகதியையும் இருப்பிடத்தையும் சேர்க்குமாறு எல்லைக் காவலர்களிடம் கேட்க் கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறது.
உதாரணமாக, Gibraltar-ல் இருந்து ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற பிரித்தானியா பெண் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவருடைய கடவுச்சீட்டில் முந்தைய பயணத்திற்கான எந்த ஒரு முத்திரையும் அதில் இல்லை.
அவர் பிரித்தானியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், எல்லை காவலர்கள் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.