எளிதான தவறும் ஐரோப்பாவில் உங்களை தடை செய்யலாம்: கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை
கோடை காலத்தை கழிக்க ஐரோப்பாவுக்கு படையெடுக்கும் பிரித்தானியர்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிக சாதாரணமான தவறும் உங்கள் பயணத்திற்கு தடையாகலாம் என அறிவுறுத்தியுள்ளனர். விடுமுறையை கழிக்க செல்லும் மக்களுக்கு இந்த முறை புதிய விதிகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஐரோப்பா ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதன் பின்னர் கொண்டுவரப்பட்டவை என்றே கூறப்படுகிறது. முதன்மை விதியாக, உங்கள் கடவுச்சீட்டை கட்டாயம் முத்திரை செய்து கொள்ள தவற வேண்டாம் என வலியுறுத்துகின்றனர்.
ஒவ்வொருமுறையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லும் போதும் வெளியேறும் போதும் உங்கள் கடவுச்சீட்டில் முத்திரை செய்து கொள்ள தவற வேண்டாம். ஏனென்றால், புதிய கட்டுப்பாடுகளின்படி 180 நாட்களுக்கு பதிலாக இனி 90 நாட்கள் மட்டுமே பிரித்தானியர்களுக்கு தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெளியேறும் போது முத்திரை செய்துகொள்ளாதவர்கள், விதிகலை மீறி அதிக நாட்கள் தங்கியதாகவே கருதப்படுவார்கள். இதனால் பயணத் தடை விதிக்க வாய்ப்பிருக்கிறது.
நாட்டை விட்டு வெளியேறும் போது முத்திரை செய்து கொள்ளாத சுற்றுலாப்பயணிகள் பலர் இதே சிக்கலில் உள்ளனர். மேலும், உங்கள் கடவுச்சீட்டில் வெளியேறும் முத்திரையை கவனித்து உறுதி செய்ய வேண்டும் எனவும், இரண்டு முறை நாட்டுக்குள் சென்றதற்கான முத்திரை செய்திருந்தால், அதுவும் சிக்கலில் முடியும் என கூறுகின்றனர்.
இபிசாவில் இருந்து திரும்பியவருக்கு வெளியேறும் முத்திரைக்கு பதிலாக நாட்டுக்குள் சென்றதற்கான முத்திரை பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் மீண்டும் இபிசா செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வெளிவிவகார அலுவலகம் தற்போது விடுமுறைக்கு வருபவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது அவர்களது கடவுச்சீட்டில் முத்திரையிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க அறிவுறுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு, எல்லையில் புதிய கடவுச்சீட்டில் பிழை காரணமாக, உரிய ஆதாரம் இருந்தபோதிலும், ஸ்பெயினுக்குள் பெண் ஒருவர் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.