சமையலறையில் மின்விசிறி நிறுவிய விவகாரம்... கடவுச்சீட்டை முடக்கி பெருந்தொகை அபராதம் விதிப்பு
லண்டனில் செயல்படும் உணவகம் ஒன்றின் சமையலறையில் மின்விசிறி நிறுவிய விவகாரத்தில், 2.5 மில்லியன் பவுண்டுகள் தொகையை நகர சபைக்கு செலுத்த அதன் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரத்துவ நடவடிக்கை
அத்துடன் அவர்களின் கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லூயிஷாம் பகுதியில் கடந்த 25 வருடங்களாக Meze Mangal என்ற துருக்கிய உணவகத்தை அஹ்மத் மற்றும் சாஹின் கோக் என்ற சகோதரர்கள் இருவர் நடத்தி வருகின்றனர்.
ஆனால் தற்போது சரியானதைச் செய்ய முயற்சித்ததால், அவர்களின் கவுன்சிலின் அதிகாரத்துவ நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர். துருக்கிய உணவை விரும்பும் லண்டன் வாசிகள், லூயிஷாம் கவுன்சில் அதிகாரிகள் உட்பட இந்த உணவகத்தின் வாடிக்கையாளர்கள்.
ஆனால் அதே நகர சபை தற்போது அந்த உணவகம் ஒரு மின்விசிறியை நிறுவியதற்காக அவர்களுக்கு £2.5 மில்லியன் கட்டணம் அல்லது 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை என மிரட்டல் விடுத்துள்ளது.
உரிய முறையில் செயல்படும் எந்த உணவகத்தின் சமையளறையிலும், வெப்பத்தை வெளியேற்ற விசிறிகள் பொருத்தப்படுவதுண்டு. ஆனால் அனுமதி வாங்காமல் விசிறி பொருத்தப்பட்டதே, தற்போது குற்றமாக பார்க்கப்படுகிறது.
கடந்த 25 வருடங்களாக அதே பகுதியில் குடியிருந்து பணியாற்றியும் வந்துள்ள அவர்களின் கடவுச்சீட்டையும் நகர சபை பறிமுதல் செய்துள்ளது. வாடை மற்றும் சமையல் சத்தம் குறித்து அண்டை வீட்டாரிடமிருந்து புகார் வந்ததை அடுத்து, அவர்கள் ஒரு வெப்பத்தை வெளியேற்றும் விசிறியைப் பொருத்தினர்.
அண்டை வீட்டாரின் புகாரை அடுத்து சுமார் 50,000 பவுண்டுகள் செலவிட்டுள்ளனர். ஆனால் சகோதரர்கள் இருவருக்கும் பொருளாதார ரீதியாக பின்னடைவை அது ஏற்படுத்தியது.
சம்பாதித்த பணம் மொத்தம்
இந்த விவகாரம் ஒருபக்கம் இருக்க, மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் உணவகம் அமைந்துள்ளதால், கூடுதல் திட்டமிடல் அனுமதிக்காக விண்ணப்பித்திருக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறப்பட்டது.
மட்டுமின்றி, குற்றச் செயல்களின் மூலம் சம்பாதித்த பணத்தை மீட்க போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக பெரும்பாலும் பயன்படுத்தப்படும் குற்றச் சட்டத்தின் கீழ் சகோதரர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மின்விசிறி பொருத்தப்பட்ட நாளில் இருந்து சம்பாதித்த பணம் மொத்தம் குற்றச் செயல்களின் மூலம் சம்பாதித்ததாக கருதப்படும். 2.5 மில்லியன் பவுண்டுகளை செலுத்தவில்லை என்றால் கடுமையான சிறைத்தண்டனை உறுதி என்றும் தெரிவித்துள்ளனர்.
உணவகம் தொடர்பான வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளதால், பொருளாதார ரீதியாக அவர்களால் செயல்பட முடியாத சூழல், அத்துடன் உணவகத்தில் பணியாற்றுவோரின் வேலைக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த நெருக்கடிகளுக்கு எதிராக போராடவே சகோதரர்கள் இருவரும் முடிவு செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |