குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான முருங்கைக்கீரை பாஸ்தா.., எப்படி செய்வது?
முருங்கை இலைகளை தினமும் உணவில் எடுத்துக்கொண்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
இதுமட்டுமில்லாமல் முடி வளர்ச்சியை அதிகரிக்க, நரைமுடி மறைய மற்றும் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
அந்தவகையில், குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான முருங்கைக்கீரை பாஸ்தா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாஸ்தா- 1 கப்
- ஆலிவ் எண்ணெய்- 2 ஸ்பூன்
- முருங்கை கீரை- 1 கைப்பிடி
- கொத்தமல்லி- சிறிதளவு
- பூண்டு- 3 பல்
- முந்திரி- 10
- சீஸ்- 3 ஸ்பூன்
- எலுமிச்சை- ½
- உப்பு- தேவையான அளவு
- மிளகு தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதித்து வந்ததும் அதில் பாஸ்தா சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதில் கழுவி சுத்தம் செய்து வைத்த முருங்கை இலைகளை சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, பூண்டு, முந்திரி, சீஸ், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு தூள், ஆலிவ் எண்ணெய் மற்றும் வதக்கிய முருங்கை இலையை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதில் அரைத்த கலவையை சேர்த்து வதக்கி அதில் வேகவைத்த பாஸ்தா சேர்த்து கிளறவும்.
இறுதியாக இதில் துருவிய சீஸ் சேர்த்து கலந்தால் சுவையான முருங்கைக்கீரை பாஸ்தா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |