சர்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ: கைது உத்தரவை மீள பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்றம்!
இலங்கையின் சர்ச்சைக்குள்ளான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நாடு திரும்பியதும் கைது செய்யப்பட வேண்டுமென்ற உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் மீள பெற்றுள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவுக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போதகர் ஜெரோம் பெர்ணான்டோ
இலங்கையில் மதச்சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் கடந்த மே மாதம் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு இலங்கை காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தாம் நாடு திரும்பியதும் கைது செய்வதை தடுக்குமாறு கோரி ஜெரோம் பெர்னாண்டோ அடிப்படை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, கடந்த சில மாதங்களாக அவர் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில், நாடு திரும்பியதும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டாமென மேன்முறையீட்டு நீதிமன்றம் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அவர் இலங்கைக்கு திரும்பிய 48 மணித்தியாலங்களில் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்க வேண்டுமெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |