சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய கேப்டன்! பெய்ல்ஸை பறக்கவிட்ட வீடியோ
அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார்.
598 ஓட்டங்கள்
பெர்த்தில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 598 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பிராத்வெயிட்டின் விக்கெட்டை அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் வீழ்த்தினார்.
Top of off stump!
— cricket.com.au (@cricketcomau) December 2, 2022
200 Test wickets for Pat Cummins! #PlayOfTheDay @nrmainsurance | #AUSvWI pic.twitter.com/KAFmg2qdbg
புதிய மைல்கல்
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலிய வீரர்களின் பட்டியலில் அவர் இணைந்தார். கம்மின்ஸ் 44 டெஸ்ட்களில் (82 இன்னிங்ஸ்) இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 6/23 ஆகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 18வது அவுஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
@AP