ஐபிஎல் வரலாற்றில் எந்த அணித்தலைவரும் செய்யாத 2 சாதனையை படைத்த பேட் கம்மின்ஸ்
ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டி டெல்லி ராஜீவ்காந்தி மைதானத்தில், டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
SRH vs DC
நாணய சுழற்சியில் வென்ற ஹைதராபாத் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பாட்டம் ஆடிய டெல்லி அணி, 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
டெல்லி தரப்பில், அசுதோஷ் சர்மா மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா 41 ஓட்டங்கள் எடுத்தனர். ஹைதராபாத் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
2வது இன்னிங்ஸ் தொடங்கும் முன்னர் தொடர்ந்து மழை பெய்ததால், ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதன் மூலம், 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி, 3 வெற்றி, 7 தோல்வியுடன் பிளேஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது.
பேட் கம்மின்ஸ் சாதனை
இந்த போட்டியில், 4 ஓவர்கள் வீசிய ஹைதராபாத் அணியின் அணித்தலைவர் பேட் கம்மின்ஸ், 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதன் மூலம், பேட் கம்மின்ஸ் அணித்தலைவராக ஐபிஎல் வரலாற்றில் இரு சாதனைகளை படைத்துள்ளார்.
இன்னிங்சின் முதல் ஓவரை வீசிய பேட் கம்மின்ஸ், முதல் பந்திலேயே கருண் நாயரை ஆட்டமிழக்க செய்வார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில், முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த ஒரே அணித்தலைவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அடுத்தாக 3 வது மற்றும் 5வது ஓவரை வீசிய அவர், அடுத்தது டூ பிளெசிஸ், அபிஷேக் போரெல் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்துவார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் அணித்தலைவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர், ஜாகீர் கான், அக்சர் படேல், ஷான் பொல்லாக் ஆகியோர் பவர்பிளேயில் 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அணித்தலைவர்கள் ஆவார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |