இந்தியாவை வீழ்த்த வேறு திட்டமும் உள்ளது: அவுஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ்
காபா டெஸ்டில் இந்திய அணியை வீழ்த்த வேறு திட்டம் உள்ளதாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
பேட் கம்மின்ஸ்
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நாளை காபாவில் தொடங்குகிறது.
இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இந்த டெஸ்ட் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில், அவுஸ்திரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் (Pat Cummins) மூன்றாவது டெஸ்ட் குறித்து பேசியுள்ளார்.
திட்டம்
அவர் கூறுகையில், "அடுத்த போட்டியிலும் bounce பந்துகளை வீசுவதற்கு சாத்தியங்கள் உள்ளன. இரண்டாவது போட்டியில் அது வேலை செய்தது.
அது மட்டுமல்லாது எங்களிடம் வேறு திட்டமும் உள்ளது. நான் எப்போதும் 2 திட்டங்களை தயாராக வைத்திருப்பேன். ஒரு திட்டம் வேலையாகவில்லை எனில் மற்றொன்றை பயன்படுத்துவேன்.
2வது போட்டியில் அந்த திட்டம் வேலை செய்ததால் இப்போட்டியிலும் ஏதோ ஒரு நேரத்தில் அதை நாங்கள் பயன்படுத்துவோம்.
காபா மைதானத்தை நேற்று நான் பார்த்தேன். அது கடந்த சில வருடங்களை போல் நன்றாக உள்ளது.
கடந்த சில தினங்களாக சூரிய வெளிச்சமும் அதன் மீது நன்றாக பட்டது. இருப்பினும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியை போல் அது இருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
இந்திய அணி 2021யில் காபா மைதானத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி, 32 ஆண்டுக்கு பின் வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |