காயத்தால் விலகும் பேட் கம்மின்ஸ் - புதிய அணித்தலைவரை அறிவித்த SRH
காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் சில போட்டிகளில் விலகியுள்ள நிலையில், SRH அணி புதிய அணித்தலைவரை அறிவித்துள்ளது.
பேட் கம்மின்ஸ் விலகல்
2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28 ஆம் திகதி தொடங்கி நடைபெற உள்ளது. 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் கிண்ணத்தை வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி(SRH) இந்த முறையும் கிண்ணத்தை வெல்ல முனைப்பு காட்டி வருகிறது.
2024 முதல் அணியை வழிநடத்தி வந்த அவுஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ், 2024 ஐபிஎல் தொடரில் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார்.

முதுகுத்தண்டு அழுத்தப் பிரச்சனை காரணமாக T20 உலக கிண்ணத்தில் இருந்து விலகினார்.
உடல் நிலை முழுவதும் குணமாகாத நிலையில், ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என SRH அணி அறிவித்துள்ளது.
இஷான் கிஷன்

பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்பும் வரை, இஷான் கிஷன் அணித்தலைவராக SRH அணியை வழி நடத்துவார் எனவும் அபிஷேக் சர்மா துணை அணித்தலைவராக செயல்படுவார் எனவும் SRH அணி அறிவித்துள்ளது.
𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓 🚨
— SunRisers Hyderabad (@SunRisers) March 18, 2026
Pat Cummins will miss a few games while recovering from injury.
Until he recovers, Ishan Kishan will be the Captain and Abhishek Sharma will be the Vice-Captain. pic.twitter.com/etXJUkQJeG
மார்ச் 28 ஆம் திகதி, பெங்களூருவில் எம். சின்னசாமி மைதானத்தில், நடைபெற உள்ள முதல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர் கொள்ள உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |