இலங்கை போராட்டத்தால் வீட்டுக்கு திரும்ப அழைப்பு! அவுஸ்திரேலிய அணி கேப்டன் சொன்ன தகவல்
இலங்கையில் நடக்கும் போராட்டத்தினால் வீட்டிற்கு திரும்பி விட அழைப்பு வந்தது என அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சமனில் முடிந்ததால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்துகொண்டன.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து, அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் போராட்டத்தால் தப்பித்திருக்க முடியாது என கருதப்பட்டது, ஆனால் போராட்டம் என்பது பார்ட்டியாக மாறியதாக கூறினார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'நேற்றைய போராட்டத்தினால் வீட்டிற்கு திரும்பி விட கோரி ஏராளமான அழைப்புகள் வந்தன. எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் நன்றாக இருப்பதாக நம்புகிறோம் என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் நாங்கள் மிக்க நலமாக இருப்பதை உணர்ந்தோம்.
போராட்டமானது கலகலப்பான பார்ட்டியாக மாறியதை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். ஓட்டலை சுற்றியுள்ள சில ஊழியர்களிடமும், ஓட்டுநர்களுடனும் பேசினோம். மிக கடினமான சூழலில் தான் அவர்கள் வேலை செய்கிறார்கள்.
Pat Cummins speaks about the mass protest that swarmed the Galle ground during the second Test and how the impact of the tour has not been lost on the touring side #SLvAUS pic.twitter.com/M6BrlCdpwr
— cricket.com.au (@cricketcomau) July 12, 2022
அவர்கள் ஒரு நாள் சாப்பிடுகிறார்கள், மறுநாள் பாதி நாள் மட்டும் சாப்பிட முயற்சிக்கிறார்கள் மற்றும் அவர்கள் குழந்தைகளுக்கும் உணவளிக்க போராடுகிறார்கள். இது மிகவும் கடினமானது' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், உலகத்தை சுற்றிப் பயணிப்பதில் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பது உண்மையில் மனதைத் தாக்கும் ஒன்று தான். ஆனால் சில வழிகளில், அது கிரிக்கெட் விளையாடுவதற்கு இங்கு இருப்பதை விட அதிகம் தான்.
அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைத் தான் நீங்கள் காண்கிறீர்கள். எனவே அது எங்கள் குழுவில் இழக்கப்படவில்லை. போராட்டத்தின் தாக்கம் என்பது நாம் கொஞ்சம் கொஞ்சமாக பேச வேண்டிய விடயம் எனவும் கூறினார்.