புற்றுநோயால் இறந்த தாய் கடைசியாக கூறிய வார்த்தை: வெற்றி ரகசியம் கூறிய கம்மின்ஸ்
தனது தாய் கூறிய வார்த்தைகள் தான் வெற்றிபெற ஊக்கப்படுத்தியதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
பேட் கம்மின்ஸ்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றதில் இருந்து அபாரமாக செயல்பட்டு வருகிறார்.
அவரது தலைமையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக்கிண்ண சாம்பியன் பட்டங்களை வென்றது.
தற்போது ஐபிஎல் தொடரிலும் சன்ரைசர் ஐதராபாத் அணியை கம்மின்ஸ் இறுதிப்போட்டிக்கு கொண்டு வந்துள்ளார்.
உயிரிழந்த தாய்
கம்மின்ஸின் இந்த வெற்றிக்கு காரணம் தனது தாய் கூறிய வார்த்தைகள் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
''பேட், போய் உலகத்தை எடுத்துக்கொள்; யாரோ சென்று இந்த அற்புதமான விடயங்களை செய்யப் போகிறார்கள், அது நீயாகவும் இருக்கலாம்'' என்று தனது தாய் கூறியதாக கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
பேட் கம்மின்ஸ் தனது தாயார் மரியா 2005ஆம் ஆண்டில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதனுடன் 18 ஆண்டுகள் போராடிய அவர் 2023ஆம் ஆண்டில் உயிரிழந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |