சிரிப்பை அடக்க முடியாது..அப்படி ஒரு ஆட்டம்! அவுஸ்திரேலிய வீரர் பகிர்ந்த வீடியோ
ஐரோப்பிய கிரிக்கெட் லீக் தொடரில் நடந்த நகைச்சுவையான ஆட்டம் தொடர்பான வீடியோவை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் பகிர்ந்துள்ளார்.
ஐரோப்பிய கிரிக்கெட் லீக் போட்டி ஒன்றில் நடந்த ரன் அவுட் முயற்சி காண்போருக்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.
துடுப்பாட்ட வீரர் சந்திக்கும் பந்தை அடிக்காமல் தவறவிடுகிறார். எனினும் அவர் ரன் ஓட நினைத்தபோது, அவரை அவுட் செய்ய விக்கெட் கீப்பர் முயற்சிக்கிறார். அதற்குள் துடுப்பாட்ட வீரர் கோட்டிற்குள் வந்துவிடுகிறார். ஆனால் மறுமுனையில் இருந்த வீரர் ரன் எடுக்க ஓடி வந்துவிட்டார்.
அவரை அவுட் செய்ய விக்கெட் கீப்பர் பந்தை எடுத்து பந்துவீச்சாளரிடம் வீசுகிறார். அதனை பந்துவீச்சாளர் தவற விடவே துடுப்பாட்ட வீரர்கள் மேலும் ஒரு ரன் எடுக்கின்றனர். அப்போது ரன் அவுட் முயற்சி முடியவில்லை.
பின்னர் பந்துவீச்சாளர் எதிர்முனையில் இருக்கும் ஸ்டம்பை நோக்கி பந்தை வீச, அதை பிடித்து ரன் அவுட் செய்ய காத்துக்கொண்டிருந்த சக அணி வீரர், பந்தை பிடிக்காமல் தனது கால்களுக்கு இடையில் தவறவிடுகிறார். அவர் தவறவிட்ட பந்தை எடுத்து மற்றோரு வீரர் அவரிடமே திரும்பவும் வீச, அதையும் சரியாக கேட்ச் செய்யாமல் தவற விடுகிறார்.
Watching this on repeat ?? https://t.co/0zK6r9cbLY
— Pat Cummins (@patcummins30) June 9, 2022
இவ்வாறு மோசமாக பீல்டிங் செய்ததால், துடுப்பாட்டம் செய்த அணி வீரர்கள் 3 ஓட்டங்கள் எடுத்துவிட்டனர். ஆனால் கடைசி வரையிலும் எதிரணி வீரர்களால் ஒருவரை கூட ஆட்டமிழக்க செய்ய முடியவில்லை.
இந்த கேலியான வீடியோவை ABC SPORTS தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதனை அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், திரும்ப திரும்ப இதனை பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை என பதிவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.