முதல் முறையாக சிறந்த வீரர் விருதை வென்ற உலகக்கோப்பை கேப்டன்
அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரர் விருதை வென்றார்.
ஐசிசி கடந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, சிறந்த வீரர் விருதை அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கைப்பற்றினார். அவர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் வெற்றியில் சிறப்பாக பந்துவீசி பங்களித்திருந்தார்.
AFP
இது முதல் முறையாக பேட் கம்மின்ஸ் பெறும் விருது ஆகும். முன்னதாக கம்மின்ஸ் கூறும்போது, 'எல்லா வடிவங்களிலும் எங்கள் அணிக்கு இது ஒரு சிறந்த ஆண்டாகும் (2023). ஒட்டுமொத்தமாக நங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை எதிர்நோக்குகிறோம்' என தெரிவித்தார்.
மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா சிறந்த வீராங்கனையாக முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |