அரசு ஆண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு- முதல்வர் விஜய் அறிவிப்பு
Paternity Leave For Men Cm Vijay Order- தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கும் முதன்முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு விடுப்பு வழங்கி முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல், ஆண் அரசு ஊழியர்களுக்கும் தந்தையர் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

குழந்தை பிறக்கும் காலத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியாக ஆதரவு அளிப்பது அவசியம் . அதேபோல், குழந்தையைப் பராமரிப்பதிலும் தந்தையின் பங்கு முக்கியமானது.
இதை கருத்தில் கொண்டு, திருமணமான ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடுப்பை குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்போ அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்து 6 மாதங்களுக்குள்ளாகவோ எடுத்துக்கொள்ளலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |