எனக்கு பயமாக இருந்தது, தோனி கூறிய வார்த்தையால் தான் 4 விக்கெட்! இலங்கையின் பத்திரனா
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தியதற்கு தோனி கூறிய வார்த்தைகள் தான் காரணம் என மதீஷா பத்திரனா கூறியுள்ளார்.
வான்கடேவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
இப்போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா (Matheesha Pathirana) 4 விக்கெட் வீழ்த்தி மிரட்டினார்.
அத்துடன் வெற்றிக்கு காரணமாக அமைந்ததால் ஆட்ட நாயகன் விருதையும் அவரே தட்டிச் சென்றார்.
When in doubt, MATHEE yosi! ?⚡️#MIvCSK #WhistlePodu ??
— Chennai Super Kings (@ChennaiIPL) April 14, 2024
pic.twitter.com/F6RYiMwcnz
போட்டிக்கு பின்னர் பேசிய பத்திரனா, ''Powerplayயில் மும்பை துடுப்பாட்டத்தை பார்த்து எனக்கு சற்று பயமாக இருந்தது. நான் முதல் ஓவர் வீசுவதற்கு முன்பு மஹி பாய் (தோனி) என்னிடம் வந்து 'நிதானமாக இரு. எதையும் புதிதாக செய்ய வேண்டியதில்லை. எப்போதும் போலவே நீ பந்துவீசு' என கூறினார். அது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது'' என தெரிவித்தார்.
Raise your☝??☝?if he made you smile! ??#MIvCSK #WhistlePodu pic.twitter.com/FAywcVgM1B
— Chennai Super Kings (@ChennaiIPL) April 14, 2024
Winning as one Superfam! ??#MIvCSK #WhistlePodu ?? pic.twitter.com/pWzfrnBWm9
— Chennai Super Kings (@ChennaiIPL) April 14, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |