ஆசியக்கோப்பை: இலங்கை வீரர் பத்திரனாவின் புயல்வேகத்தில் சுருண்ட வங்கதேசம்
பல்லேகேலேவில் தொடங்கிய இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 164 ஓட்டங்களில் சுருண்டது.
வங்கதேசம் நாணய சுழற்சியில் வெற்றி
ஆசியக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை எதிர்கொண்டுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற வங்கதேசம் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில், தன்ஜிட் ஹசனை 2 பந்துகளிலேயே வெளியேற்றி தீக்ஷணா அதிர்ச்சி கொடுத்தார்.
Twitter (@BCBtigers)
பின்னர் முகமது நைம் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஷகிப் அல் ஹசனை 5 ஓட்டங்களில் பத்திரனா ஆட்டமிழக்க செய்தார்.
Twitter (@BCBtigers)
விக்கெட்டுகளை அள்ளிய பத்திரனா
அதனைத் தொடர்ந்து பத்திரனாவின் புயல்வேகத்தில் நிலைகுலைந்த வங்கதேச அணி 42.4 ஓவர்களில் 164 ஓட்டங்களுக்கு சுருண்டது.
Twitter (ICC)
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் போராடிய நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 89 (122) ஓட்டங்கள் எடுத்தார்.
மதீஷா பத்திரனா 4 விக்கெட்டுகளும், தீக்ஷணா 2 விக்கெட்டுகளும், ஷனகா மற்றும் தனஞ்செய டி சில்வா, வெல்லாலகே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Twitter (@OfficialSLC)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |