சொதப்பிய அசலங்கா, நொறுக்கிய நிசங்கா: ருத்ரதாண்டவமாடிய இலங்கை வீரர்கள்
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பதும் நிசங்கா 76 ஓட்டங்கள் விளாசினார்.
டக்அவுட்
இலங்கை மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹாரியில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்பே பந்துவீச்சை தெரிவு செய்ய, இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
நிஷான் மதுஷ்கா 13 பந்துகளை சந்தித்து டக்அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த குசால் மெண்டிஸ் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார்.
நிசங்கா அரைசதம்
மறுமுனையில் தொடக்க வீரரான பதும் நிசங்கா (Pathum Nissanka) அதிரடியாக அரைசதம் விளாசினார். அணியின் ஸ்கோர் 109 ஆக உயர குசால் மெண்டிஸ் (Kusal Mendis) 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து நிசங்கா 76 (92) ஓட்டங்களிலும், சதீர சமரவிக்ரமா 35 (40) ஓட்டங்களிலும் வெளியேறினர். அணித்தலைவர் சரித் அசலங்கா (Charith Asalanka) 6 ஓட்டங்களில் கவண்டு பந்துவீச்சில் அவுட் ஆகி சொதப்பினார்.
எனினும் ஜனித் லியனகே (Janith Liyanage), கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) கூட்டணி ஜிம்பாப்பே பந்துவீச்சை வேட்டையாடியது.
இவர்களது கூட்டணியின் மூலம் கடைசி 10 ஓவர்களில் 113 ஓட்டங்கள் எடுக்க, இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 298 ஓட்டங்கள் குவித்தது.
கமிந்து மெண்டிஸ் 36 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்களும், லியனகே ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்களும் விளாசினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |