அவுஸ்திரேலியாவுக்கு எதிராக புதிய சாதனை படைத்த இளம் இலங்கை வீரர்
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனும், இளம் வீரருமான பதும் நிசங்கா புதிய சாதனை படைத்துள்ளார்.
மெல்போர்னில் நடந்த 4வது டி20 போட்டியில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய வெற்றி வாகை சூடியது.
4வது டி20 போட்டியில் இலங்கை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனும், இளம் வீரருமான பதும் நிசங்கா 46 ரன்களில் அவுட்டானார்.
இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அதிக ரன்களை குவித்த இலங்கை வீரர் என்ற சாதனையை பதம் நிசங்கா இன்று முறியடித்துள்ளார்.
2016-2017 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அசேல குணரத்ன படைத்த சாதனையை நிசங்கா முறியடித்தார்.
பதும் நிசங்கா தற்போது முதல் 4 போட்டிகளில் 171 ரன்களை அடித்துள்ளார்.
அசேல குணரத்ன 2016-2017 டி20 தொடரில் 3 போட்டிகளில் 140 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.