பதும் நிசங்க சதம் விளாசல்! கொழும்பு டெஸ்டில் கம்பீர ஆட்டம்
வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் பதும் நிசங்க சதம் விளாசினார்.
நங்கூர ஆட்டம்
கொழும்பில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டத்தை துவங்கி ஆடி வருகிறது.
லஹிரு உதரா 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டைஜூல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தினேஷ் சண்மலுடன் கைகோர்த்த பதும் நிசங்க நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பதும் நிசங்க சதம்
நிதானமாக பவுண்டரிகளை விரட்டிய பதும் நிசங்க (Pathum Nissanka) 4வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.
முன்னதாக காலே டெஸ்டில் நிசங்க 187 ஓட்டங்கள் விளாசியிருந்தார். மறுமுனையில் தினேஷ் சண்டிமல் (Dinesh Chandimal) 34வது அரைசதம் விளாசினார்.
இந்தக் கூட்டணி தற்போதுவரை 122 ஓட்டங்கள் குவித்துள்ளது. இலங்கை அணி 1 விக்கெட்டுக்கு 210 ஓட்டங்கள் என வலுவான நிலையில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |