அதிர்ஷ்டம் இல்லாத இலங்கை அணி வீரர் - சந்தித்த முதல் பந்திலேயே நிகழ்ந்த சோகம்
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வீரர்கள் எவ்வித எதிர்ப்புமின்றி சரணடைந்ததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடந்த இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
இதனிடையே இப்போட்டியில் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டகாரரான பதும் நிஷன்கா முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
புவனேஷ்வர் குமார் வீசிய அந்த ஓவரை வீசிய நிலையில் நிஷன்கா அதிர்ஷ்டம் இல்லாமல் அவுட்டானதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.