உலகக்கோப்பை போட்டியில் வித்தியாசமாக பவுண்டரி அடித்த இலங்கை வீரர்! ஆடுகளத்தில் விழுந்த வீடியோ
உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணி வீரர் பதும் நிஷங்கா அடித்த வித்தியாசமான ஷாட்.
ஆடுகளத்தில் கழண்டு விழுந்த அவரின் ஷூ.
டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை வீரர் பதும் நிஷங்கா வித்தியாசமான முறையில் பவுண்டரி அடித்த போது அவரின் ஷூ கழண்டு விழுந்த வீடியோ வைரலாகியுள்ளது.
UAE அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 74 ரன்கள் குவித்தார்.
போட்டியின் 18வது ஓவரில் UAE அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஹூர் கான் வீசிய பந்தை நிஷங்கா எதிர்கொண்டார். கான், ஆப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய பந்தை நிஷங்கா லெக் எல்லையை நோக்கி ஸ்கூப் செய்து வித்தியாசமான ஷாட் மூலம் பவுண்டரி விளாசினார்.
இந்த ஷாட்டின் காரணமாக, நிஷங்கா ஆடுகளத்தில் கீழே விழ அவரின் ஷூ கழண்டு விழுந்தது.
இருந்த போதிலும் கஷ்டப்பட்டு அவர் அடித்த ஷாட்டுக்கு நல்ல பலன் கிடைத்தது.