பிரித்தானியாவில் மருத்துவப் படுக்கைக்காக 99 மணிநேரம் காத்திருத்த நோயாளி! புகைப்படங்கள் வெளிப்படுத்தும் அவலம்
பிரித்தானியாவில் உள்ள சில மருத்துவமனைகளில் நோயாளிகள் படுக்கைக்காக பல மணிநேரம் காத்தரிருக்க வேண்டிய அவலநிலை உள்ளதாக வெளியான புகைபடங்களை தெரிவிக்கின்றன.
மருத்துவப் படுக்கை பற்றாக்குறை
கடந்த வாரம் Wiltshire-யில் மருத்துவமனைக்கு பெயரிடப்படாத நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டார். ஆனால் அவருக்கு படுக்கை உடனடியாக வழங்கப்படவில்லை.
மருத்துவமனை ஊழியர்கள் அவருக்காக படுக்கையை கண்டுபிடிக்க முயன்றனர். அதனால் கிட்டத்தட்ட 99 மணிநேரம் குறித்த நோயாளி காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் நாற்காலி மற்றும் தரையில் படுத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.
@Liverpool Echo
இதேபோல் ஆக்ஸ்போர்ட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் A&E பிரிவில் தீவிர நோய்வாய்ப்பட்ட மூன்று வயது சிறுமியும், சிகிச்சைக்காக பல மணிநேரம் காத்திருந்த பின் பிளாஸ்டிக் நாற்காலியில் சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
குறித்த சிறுமியின் தந்தையான டாம் ஹூக், 'நாங்கள் A&E-க்கு வந்து ஐந்து மணி நேரம் கழித்து மற்றும் உதவிக்கு போன் செய்து 22 மணிநேரத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை தேசிய உடல்நிலை சேவை-யின் (NHS) சிறப்பான ஒன்றாகும்' எனக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் புகைப்படத்தை பகிர்ந்தார்.
மேலும் வெளியான இதுபோன்ற புகைப்படங்கள் நோயாளிகள் வலியால் A&E துறைகளின் தரையில் கிடப்பதைக் காட்டியது.
காத்திருப்போர் பட்டியல்
அதேபோல் லிவர்பூலில் உள்ள மருத்துவமனை குறித்து நோயாளி ஒருவர் கூறுகையில், 'காத்திருப்பு அறையில் ஒரு பெண் பாத்திரங்களில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு உதவ ஊழியர்கள் யாரும் இல்லை. அதனால் மற்ற பொதுமக்கள் அவருக்கு உதவினர்.
படுக்கைக்காக 30 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக ஊழியர் ஒருவர் எங்களிடம் கூறினார். அவரிடம் காத்திருப்பவர்களின் மூன்று பக்கப் பெரிய பெயர் பட்டியலே இருந்தது' என தெரிவித்தார்.
கடந்த மூன்று நாட்களில் டஜன் கணக்கிலான அறக்கட்டளைகள் முக்கியமான சம்பவங்களை அறிவித்துள்ளதால், NHS மீதான அழுத்தத்தின் முழு அளவு தெளிவாகியுள்ளது.
இதுகுறித்து NHS பணியாளர் ஒருவர் கூறுகையில், 'நாங்கள் இப்போது தாழ்வாரங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் A &E-யில் உள்ள எங்கள் வாக்-இன் பகுதியில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சிலிண்டர்களில் போதுமான ஆக்சிஜன் இல்லாத நிலையில் இருக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் தலைமை மருத்துவ அதிகாரி ஜான் வெஸ்ட்புரூக் கூறுகையில், 'எங்கள் மருத்துவ வாழ்க்கையில் இதற்கு முன்பு பார்த்திராத வகையிலான நோயாளிகளை நாங்கள் காண்கிறோம்' என தெரிவித்துள்ளார்.
@PA