நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வெகுவிரைவில் திருமணம்! திடீரென வேண்டாம் என நிறுத்திய பிரபல தமிழ்ப்பட நடிகை
பிரபல நடிகை மெஹ்ரீனுக்கு வெகு விரைவில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் திடீரென திருமணத்தை அவர் நிறுத்தியதோடு அதற்கான காரணமும் தற்போது வெளிவந்துள்ளது.
தமிழில் தனுஷ் ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் மெஹ்ரீன், நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.
மெஹ்ரீனும் அரியானா முன்னாள் முதல்-மந்திரி பஜன்லாலின் பேரனும் அரசியல்வாதியுமான பவ்யா பிஷ்வோவும் காதலித்தனர். இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
விரைவில் திருமணத்தை நடத்துவற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் திருமணத்தை நிறுத்துவதாக மெஹ்ரீன் அறிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், நானும் பவ்யா பிஷ்வோவும் எங்கள் நலன் கருதி திருமணத்தை ரத்து செய்கிறோம். இனிமேல் பவ்யாவுடனும் அவரது குடும்பத்தினருடனும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.
எனது அடுத்த படங்களின் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்த உள்ளேன் என்று கூறினார். இந்த நிலையில் திருமணத்தை நிறுத்தியதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என்று காதலர் குடும்பத்தினர் தடை விதித்ததாகவும் அதனை ஏற்காமல் திருமணத்தை மெஹ்ரின் ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.