மருத்துவமனையில் இருக்கும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி எப்படியிருக்கிறார்? நெருங்கிய நண்பர் ராஜா தகவல்
பிரபல பட்டிமன்ற பேச்சாளரான பாரதிபாஸ்கர் , உடல்நிலை குறித்து அவருடைய நண்பரான ராஜா கூறியுள்ளார்.
தனியார் வங்கியில் உயரதிகாரியாக பணிபுரிந்து வரும் பாரதி பாஸ்கருக்கு திடீரென சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, பரிசோதித்த மருத்துவர்கள், மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்து, அறுவை சிகிச்சை செய்தனர்.
அதன் பின், தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் இருந்து வரும் இவரது உடல்நிலை, சீராக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து தற்போது நலமாக இருப்பதாகவும், ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவரின் நண்பரும் பிரபல பட்டிமன்ற பேச்சாளருமான ராஜா கூறியுள்ளார்.
இது பாரதியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.