சிக்கலில் பிரபல பிரெஞ்சு கால்பந்து நட்சத்திரம்: பல ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம்
பிரபல பிரெஞ்சு கால்பந்து நட்சத்திரம் பால் போக்பா டெஸ்டோஸ்டிரோன் சோதனையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பல ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
4 ஆண்டுகள் வரையில் தடை
ஜுவென்டஸ் மற்றும் பிரான்ஸ் கால்பந்து அணி மிட்பீல்டரான பால் போக்பா டெஸ்டோஸ்டிரோன் சோதனையில் சிக்கியுள்ளதால் சிகிச்சை எடுத்துக்கொள்ள விலக்கு அளிக்கப்படாது எனவும், இதனால் 4 ஆண்டுகள் வரையில் தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
@getty
இந்த நிலையில் போக்பா விளையாடுவதில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு பதிலளிக்க 3 நாட்கள் அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜுவென்டஸ் அணி நிர்வாகமும் நடவடிக்கை முன்னெடுக்கும் என்றே கூறப்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் என்பது ஒரு ஹார்மோன், இது தசையின் அளவையும் வலிமையையும் அதிகரிக்க உதவுகிறது.
தமது உயிருக்கு அச்சுறுத்தல்
அத்துடன் உடல் செயல்பாடுகளில் இருந்து வேகமாக மீட்க தூண்டுகிறது. கடந்த கோடையில் மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து ஓல்டு லேடிக்கு திரும்பியதில் இருந்து போக்பா பல காயங்களுக்கு உள்ளான பின்னடைவை சந்தித்து வருகிறார்.
@Shutterstock
கடந்த தொடரில் வெறும் 6 லீக் ஆட்டங்களில் மட்டுமே களமிறங்கினார். இந்த நிலையில், சட்டவிரோத குழுக்களால் தமது உயிருக்கும் சொத்துக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு, தாம் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுக்கு தயாராகி வருவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்த நிலையிலேயே தற்போது டெஸ்டோஸ்டிரோன் சோதனையில் சிக்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |