இதுவரை உருவாக்கிய அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது: அதிர்ச்சியில் பிரான்ஸ் கால்பந்து நட்சத்திரம்
நான்கு ஆண்டுகள் கால்பந்து விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் காயப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளதாக பிரான்ஸ் கால்பந்து நட்சத்திரம் பால் போக்பா தெரிவித்துள்ளார்.
ஊக்கமருந்து விவகாரத்தில்
ஜுவென்டஸ் அணியின் மிட்ஃபீல்டரான 30 வயது பால் போக்பா ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தற்போது அந்த விவகாரம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள போக்பா, தாம் இதுவரை உருவாக்கிய அனைத்தும் தம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாகவுவும் போக்பா தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்டு 20ம் திகதி ஜுவென்டஸ் அணியின் முதல் ஆட்டத்திற்கு பின்னர் போக்பா வாடிக்கையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இனி 2027 வரையில்
அந்த சோதனையில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து உரிய அதிகாரிகளால் நான்கு ஆண்டுகள் இடைநீக்கம் பரிந்துறைக்கப்பட்டது.
ஆனால் இந்த தீர்ப்பு முறையல்ல என்றும், தாம் தெரிந்தோ திட்டமிட்டோ ஊக்கமருந்து எடுத்துக்கொள்ளவில்லை என்றும் போக்பா தெரிவித்துள்ளார். குறித்த தடை உத்தரவால் இனி 2027 வரையில் போக்பா கால்பந்து விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |