ரொனால்டோவை தொடர்ந்து சம்பவம் செய்த போக்பா! வைரலாகும் சர்ச்சைக்குரிய வீடியோ
ரொனால்டோ நேற்று கோகோ-கோலா பாட்டில்களை அகற்றியது சர்ச்சையானதைத் தொடர்ந்து, மற்றோரு பிரபலமான கால்பந்து வீரரான பால் போக்பா பிரபல நிறுவனத்தின் பீர் பாட்டிலை அகற்றி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
உலகின் மிக பிரபலமாக ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் (EURO 2020) 16-வது தொடருக்கான லீக் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
நேற்று போட்டிக்கு முன்னர் ரொனால்டோ கோகோ-கோலா பாட்டில்களை அகற்றியது சர்ச்சையானது. அதைப்பற்றிய பேச்சுக்களின் சூடு தணிவதற்குள், இன்று மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் விளையாடும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் Paul Pogba புதிய தரமான சம்பவவத்தை செய்துள்ளார்.
இன்று போட்டிக்கு முன்னர், செய்தியாளர் சந்திப்பில் அமர்ந்த போக்பா, தனக்கு முன் இருந்த Heineken பீர் போத்தலை தனது கண்பார்வைக்கு படாமல் அகற்றினார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் பேசுபொருளாகியுள்ளது.
போக்பா ஒரு பக்தியுள்ள இஸ்லாமியர். இஸ்லாம் மது அருந்துவதை தடை செய்கிறது. மதுபானம் ஒரு 'ஹராம்', அதாவது தடைசெய்யப்பட்ட ஒன்று என கூறுகிறது. அவர் பீர் போத்தலை அகற்றியதற்கு இது காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
paul pogba hates heineken
— Vini Johny28 (@ViniJohny28) June 15, 2021
Don't give Paul Pogba Heineken pic.twitter.com/4inexnnO3J
முன்னதாக நேற்று நடந்த லீக் ஆட்டத்தில், போட்டிக்கு முன்னதாக போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது, அவர் மேஜையின் மீது இருந்த கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை வைத்தார்.
Do NOT put Coca Cola in front of Cristiano Ronaldo 😠
— Goal (@goal) June 15, 2021
This is absolutely brilliant 🤣 pic.twitter.com/bw9FYlTOI4
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், இந்த நிகழ்வு உலக அளவில் பேசுபொருளானது.
இதனால் சில நிமிடங்களில் கோகோ-கோலாவின் சந்தை மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது. ரொனால்டோவின் ஒற்றை நகர்வால் கோக்க கோலா நிறுவனம் சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022