அயர்லாந்து கிரிக்கெட் அணியில் யாரும் செய்யாத சாதனையை பால் ஸ்டிர்லிங்
அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்டதொடர், அயர்லாந்தில் இன்று தொடங்கியுள்ளது.
திணறும் மேற்கிந்திய தீவு அணி
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய அயர்லாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்களை இழந்து, 303 ஓட்டங்களை குவித்தது.
அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆண்ட்ரூ பால்பிர்னி, 112 ஓட்டங்கள் எடுத்தார்.
மேலும், அணித்தலைவர் பால் ஸ்டிர்லிங்(54) மற்றும் ஹாரி டெக்டோர்(56) இருவரும் அரை சதம் அடித்தனர்.
304 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 9 ஓவர்களுக்கு 31 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது.
முதல் அயர்லாந்து வீரர்
இந்த போட்டியில், பால் ஸ்டிர்லிங் 34 ஓட்டங்களை கடந்த உடன், சர்வதேச கிரிக்கெட்டில் 10ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் அயர்லாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் போட்டி, T20 போட்டி என 3 வடிவ போட்டிகளிலும், 325 போட்டிகளில் விளையாடியுள்ள பால் ஸ்டிர்லிங், இதுவரை 10,017 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
அடுத்த போட்டியில் 21 ஓட்டங்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் போட்டியில், 6000 ஓட்டங்களை எடுத்த முதல் அயர்லாந்து வீரர் என்ற பெருமையை பெறுவார்.
மேலும், 3 சிக்ஸர்கள் அடித்தால், 150 சிக்ஸர்கள் அடித்த முதல் அயர்லாந்து வீரர் என்ற சாதனையை படைப்பார்.