Pavakkai Fry: கசப்பே இல்லாமல் மொறுமொறு பாகற்காய் வறுவல்: எப்படி செய்வது?
பாகற்காயில் இயற்கையாகவே கசப்பு தன்மை இருக்கிறது. இதனால் அனைவருக்கும் பிடிக்காத காய்கறியாக பாகற்காய் இருக்கிறது.
ஆனால் பாகற்காயில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன.
கசப்பே இல்லாமல் சுவையான மொறுமொறு பாகற்காய் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாகற்காய்- 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- காஸ்மீரி மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- கரம் மசாலா- ½ ஸ்பூன்
- சோம்பு பொடி - ½ ஸ்பூன்
- சீரக பொடி -½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கடலை மாவு- ¼ கப்
- அரிசி மாவு- 2 ஸ்பூன்
- கார்ன் பிளவர்- 1 ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் பாகற்காயை சுத்தம் செய்து சிறிய சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
பின் இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி 1 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து அதில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி ¼ மணி நேரம் அப்படியே வைக்கவும்.
அடுத்து தண்ணீரை வடித்து பாகற்காயை மட்டும் தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவேண்டும்.
தொடர்ந்து பாகற்காயில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஸ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, சோம்பு பொடி, சீரக பொடி, உப்பு, கடலை மாவு, அரிசி மாவு, கார்ன் பிளவர் மாவு சேர்த்து தண்ணீர் தெளித்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள பாகற்காய் சேர்த்து பொறித்து எடுத்தால் கசப்பே இல்லாத சுவையான மொறுமொறு பாகற்காய் வறுவல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |