பவன் ரத்நாயக்க 118 ஓட்டங்கள் விளாசல்! தோல்வியிலும் அபார சாதனை
England beat sri lanka by 55 runs: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லாகூரில் நடந்த முத்தரப்பு தொடரின் 6வது போட்டியில், இங்கிலாந்து அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
பென் டக்கெட் 167 ஓட்டங்கள்
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி லாகூரில் நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 386 ஓட்டங்கள் குவித்தது.
ருத்ரதாண்டவம் ஆடிய பென் டக்கெட் (Ben Duckett) 167 ஓட்டங்கள் (24 பவுண்டரிகள்) ஓட்டங்களும், டாம் பான்டன் 74 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 45.1 ஓவர்களுக்கு 331 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பவன் ரத்நாயக்க சாதனை
அதிகபட்சமாக பவன் ரத்நாயக்க 77 பந்துகளில் ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 118 ஓட்டங்களும், குசல் மெண்டிஸ் 71 பந்துகளில் (5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) 89 ஓட்டங்களும் விளாசினர்.

லியாம் டாவ்ஸன் 4 விக்கெட்டுகளும், சோனி பேக்கர் 2 விக்கெட்டுகளும், சாம் கர்ரன், ஹென்றி மற்றும் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இப்போட்டியில் சதம் விளாசியதன் மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை பவன் ரத்நாயக்க (Pavan Rathnayake) படைத்தார். அவர் 12 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் அடித்துள்ளார். முன்னதாக, உபுல் தரங்க 21 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் அடித்திருந்தார்.
