தமிழகத்தில் முதலீடு செய்த பாக்ஸ்கான் நிறுவனம்
தமிழகத்தின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.1600 கோடியை முதலீடு செய்துள்ளது பாக்ஸ்கான்(Foxconn) நிறுவனம்.
புதிதாக மொபைல் உதிரிபாக தொழிற்சாலையை அமைக்கவுள்ளது பாக்ஸ்கான், இதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு சந்தித்து, தமிழ்நாட்டில் அந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய முதலீடுகள் குறித்து பேசினார்.
Was delighted to meet the Foxconn Group Chairman Mr.Young Liu and his team. Various investment opportunities in Tamil Nadu were discussed. Investment commitment to establish a mobile component manufacturing facility in Kancheepuram district for Rs. 1600 crore with a potential… https://t.co/QhP0UI86od
— M.K.Stalin (@mkstalin) July 31, 2023
இந்த சந்திப்பின்போது தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில், வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விஷ்ணு, பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சைய் சியாங், பொதுமேலாளர் பாப் சென், தலைமை அலுவலக இயக்குனர் செந்தில்குமார், இந்திய பிரதிநிதி லீ, இணை மேலாளர் ஹன்னா வேங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
அப்போது ரூ.1,600 கோடி முதலீடு செய்வது தொடர்பான ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |