மருத்துவ காப்பீடு தொடர்பில் சுவிஸ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
நீண்ட பல ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக மருத்துவ காப்பீடு கட்டணத் தொகையில் சுவிஸ் மக்களுக்கு மகிழ்வான தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நீண்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவ காப்பீடுகளுக்கான கட்டணத் தொகை குறைக்கப்படுகிறது. இதனால், சராசரியாக மருத்துவ காப்பீடு கட்டணத் தொகையில் 1.3 சதவீதம் சரிவடைகிறது.
புதிய இந்த முடிவானது 2022 முதல் அமுலுக்கு வரும் என்றே தெரிய வந்துள்ளது. இது நாட்டின் சரிபாதி மாநிலங்களில் அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும் கூறப்படுகிறது.
மேலும், செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வேறுபடும் என கூறப்படுகிறது. இதனால் 2022 முதல் சராசரி மாதாந்திர மருத்துவ காப்பீட்டு பிரீமியம் என்பது 315.30 பிராங்குகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடும். சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில், கடந்த பத்து ஆண்டுகளில் மருத்துவ காப்பீட்டு கட்டணமானது ஆண்டுதோறும் சராசரியாக 2.4% உயர்ந்துள்ளது.
சுவிஸ் அரசாங்கத்தின் இந்த அதிரடி முடிவுக்கு காப்பீடு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.