தித்திக்கும் சுவையில் குதிரைவாலி அரிசி பாயாசம்.., எப்படி செய்வது?
குதிரைவாலி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலிற்கு வைட்டமின்கள், நார்ச்சத்துகள் போன்றவை கிடைக்கும்.
அதன்படி, இந்த குதிரைவாலி அரிசி பாயாசத்தை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் குதிரைவாலி அரிசி பாயாசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- குதிரைவாலி அரிசி- 1 கப்
- நெய்- 2 ஸ்பூன்
- பால்- 1 லிட்டர்
- முந்திரி- 15
- பாதாம்- 15
- நாட்டுச்சர்க்கரை- 1 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் கழுவிய குதிரைவாலி அரிசியை சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
பின் அரிசி வெந்ததும் இதில் பால் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் நாட்டுசர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து பாதாம் மற்றும் முந்திரியை சுடுதண்ணீரில் ஊறவைத்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் நன்கு கொதித்து கெட்டியாகி வந்த அரிசியில் கரைத்த நாட்டுச்சர்க்கரை, அரைத்த பேஸ்ட் சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக இதில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான குதிரைவாலி அரிசி பாயாசம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |