Paytm வங்கி முடக்கம்.., App இனி பயன்படுத்த முடியுமா? RBI வெளியிட்ட அறிவிப்பு
பிப்ரவரி 29 முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய காலத்தில் நாம் பணம் அனுப்புவதற்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாம் வீட்டில் இருந்தபடியே கையில் இருக்கும் மொபைல் மூலம் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம்.
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஏராளமானோர் பயன்படுத்தும் செயலியாக Paytm உள்ளது. இந்நிலையில், Paytm Payments Bank சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
RBI அறிவிப்பு
ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறுவதாக Paytm மீது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 29 முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாடு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொள்வதற்காக 2022 -ம் ஆண்டு Paytm Payments Bank நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் ரிசர்வ் வங்கியின் தணிக்கையாளர்கள் நடத்திய ஆய்வில் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனால் Paytm -ல் பணத்தை புதிதாக டெபாசிட், பண பரிமாற்றம் செய்ய உதவும் Paytm Payments Bank செயல்பாடு நிறுத்தப்படுகிறது. அதேபோல, FASTags ப்ரீபெய்டு வசதிகளை வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், Paytm Wallet -களில் ஏற்கனவே உள்ள தொகையை பயன்படுத்த தடை இல்லை. மேலும், Paytm UPI சேவைகளை பயன்படுத்தம் தடை இல்லை. UPI மூலம் பணப் பரிமாற்றம் செய்ய பேடிஎம் செயலியை பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |