1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Paytm
Paytm நிறுவனம் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல UPI செயலியான Paytmன் தாய் நிறுவனமான One 97 Communication, ஊழியர்களுக்கான சம்பள செலவில் 15 சதவிகிதத்தை மிச்சப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
இதன்படி பல்வேறு துறைகளில் பணிபுரியும் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.
இதனால் பணம் செலுத்துதல்கள், கடன், செயல்பாடுகள், விற்பனை ஆகிய துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படலாம்.
மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியாக AI-யை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே காப்பீடு விநியோக துறையில் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் குறித்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.