கேரளாவின் பாரம்பரியமான பழம் பொரி.., எப்படி செய்வது?
பழம் பொரி என்பது கேரளாவின் பாரம்பரியமான மற்றும் பிரபலமான சிற்றுண்டி வகைகளில் ஒன்றாகும்.
இதனை மாலைநேரம் டீயுடன் சேர்த்து சாப்பிடும்போது அவ்வளவு நிறைவாக இருக்கும்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பழம் பொரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா மாவு- 1 கப்
- அரிசி மாவு- 3 ஸ்பூன்
- உப்பு- 1 சிட்டிகை
- ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- வெல்லம்- 1 ஸ்பூன்
- சோடா உப்பு- 1 சிட்டிகை
- நேந்திரம் பழம்- 4
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, ஏலக்காய் தூள், மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பின் இதில் சோடா மாவு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து நேந்திரம் பழத்தை தோலுரித்து நீளமாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பழத்தை மாவில் நனைத்து பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான பழம் பொரி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |