ஜாகுவார் லேண்ட் ரோவரின் முதல் இந்திய CEO: யார் இந்த PB பாலாஜி?
Jaguar Land Rover-ன் புதிய தலைவராக முதல் முறையாக ஒரு தமிழர் நியமிக்கப்படுகிறார்.
டாடா குழுமத்தின் பிரபல பிரிட்டிஷ் கார் நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவரின் (JLR), தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) PB பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது டாடா குழுமத்தின் குழு நிதி அதிகாரியாக (Group CFO) பணியாற்றி வரும் பாலாஜி, 2025 நவம்பரில் புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.
தற்போது JLR CEO-வாக இருப்பவரான எட்ரியன் மார்டெல் (Adrian Mardell), 35 ஆண்டு சேவைக்குப் பிறகு ஓய்வெடுக்க உள்ளார்.
JLR நிர்வாக குழு கடந்த சில மாதங்களாக புதிய தலைவரை தெரிவு செய்வதில் தீவிரமாக இருந்தது. அதன் முடிவாக, நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த பாலாஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாலாஜி IIT சென்னை மற்றும் IIM பட்டதாரி ஆவார். அவருக்கு வாகனத் துறை மற்றும் நுகர்வோர் தயாரிப்பு துறைகளில் 32 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இந்தியா, சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து போன்ற இடங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
"இந்த அபாரமான நிறுவனத்தை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமிதம் கொள்கிறேன்," என்று பி.பி. பாலாஜி கூறினார்.
Jaguar Land Rover PLC, Tata Motors மற்றும் Tata Sons தலைவரான என். சந்திரசேகரன், “பாலாஜி இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துவார்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நியமனம் மூலம் JLR தனது ‘Reimagine’ திருப்புமுனைத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |