இட்லி, தோசை மாவு விற்று ரூ.2,000 கோடிக்கு அதிபதியான கூலித்தொழிலாளியின் மகன்
ரூ.2,000 கோடிக்கு அதிபதியான பிரபல தோசை மற்றும் இட்லி மாவு நிறுவனமான நிறுவனத்தின் தலைவர் ஒருவரை இந்த பதிவில் பார்க்கலாம்.
யார் இவர்?
இந்திய மாநிலமான கேரளாவில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள கூலித்தொழிலாளியின் மகன் பி.சி. முஸ்தபா (P.C. Mustafa). இவர், 6 -ம் வகுப்பு படிக்கும் போது தேர்வில் தோல்வி அடைந்ததால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு விவசாய வேலை பார்த்தார்.
இதன்பிறகு, முஸ்தபாவின் பள்ளி ஆசிரியர் ஒருவர், அவரது பள்ளி படிப்பை தொடர உதவினார். பின்னர், கோழிக்கோட்டில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் Computer Science படித்தார். அடுத்து 1995-ம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து மோட்டோரோலா நிறுவனத்தில் ரூ.15,000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
தொடர்ந்து, மன்ஹாட்டன் அசோசியேட்ஸ் நிறுவனத்திலும் பணியாற்றிவிட்டு, துபாயில் உள்ள சிட்டி பேங்கில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். இதனையடுத்து, 2000 -ம் ஆண்டு இன்டீரியர் டிசைனரான சஜ்னா என்பவரை திருமணம் செய்து, தற்போது இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.
(ஐ.டி.) ப்ரெஷ் புட்ஸ் - ID fresh
இதனைத்தொடர்ந்து வர்த்தகம் மீது கொண்ட ஆர்வத்தால் ஐ.ஐ.எம் -ல் வர்த்தக நிர்வாகம் தொடர்பான படிப்பை படித்தார். இவர், படிக்கும் நேரத்தில் இந்தியாவில் காலை உணவில் தென்னிந்திய உணவு வகைகள் இல்லை என்பதை உணர்ந்தார்.
இட்லி, தோசை மாவு நிறுவனத்தை தொடங்கினால் நன்றாக சம்பாதிக்கலாம் என்று நினைத்த P.C. Mustafa, 2005-ம் ஆண்டு பெங்களூருவில் ரூ.50,000 முதலீட்டில் 50 சதுர அடி கடையில் இட்லி தோசை (ஐ.டி.) ப்ரெஷ் புட்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அப்போது, தினமும் 100 மாவு பாக்கெட் விற்பனை செய்யவே 8 மாதங்கள் ஆகின.
இதனைத்தொடர்ந்து, தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த கேரளாவில் உள்ள நிலத்தை விற்று 550 சதுர அடியில் மாவு உற்பத்தி நிறுவனத்தை தொடங்கினார். அப்போது, தினமும் 100 மாவு பாக்கெட் விற்பனை செய்தார். வர்த்தகம் பெருகியது. 300 பங்குதாரர் கடைகளுக்கு தினமும் 200 கிலோ மாவு தயார் செய்து கொடுத்ததில் வருமானம் ரூ.1 கோடியை எட்டியது.
அதன்பின், ஹைதராபாத் மற்றும் மும்பை உள்பட 10 புதிய நகரங்களில் வர்த்தகத்தை வளர்த்தார். 2015 -ம் ஆண்டு நிறுவனத்தின் மதிப்பு ரூ.100 கோடியை எட்டியது. தினமும் 50,000 கிலோ மாவு, 40,000 சப்பாத்தி மற்றும் 2,00,00 பராத்தாக்களை நிறுவனம் விற்பனை செய்தது.
ராகி மாவு, தயிர் மற்றும் பன்னீர் ஆகியவற்றையும் விற்பனை செய்ய தொடங்கினார். தற்போது இவரது ஐ.டி. ப்ரெஷ் புட்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.2,000 கோடியை எட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |