தகாத நடத்தை குறித்து ஐசிசியிடம் புகார் அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அகமதாபாத் மைதானத்தில் முறையற்ற நடத்தை குறித்து ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது.
சர்ச்சை
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை போட்டி குஜராத்தின் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது.
அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து வெளியேறியபோது ரசிகர்களிடையில் இருந்து சிலர் 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்டது சர்ச்சையானது.
அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் 'Sorry Pakistan' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது.
AP
ஐசிசியிடம் புகார்
அதில், பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கான விசா தாமதம் மற்றும் 2023 உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா கொள்கை இல்லாதது குறித்தும், பாகிஸ்தான் அணியை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட முறையற்ற நடத்தை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை PCB மீடியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
முன்னதாக, 'இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஒரு ஐசிசி நிகழ்வாக தெரியவில்லை. நான் மிகவும் நேர்மையாக இருப்பேன். இது ஒரு இருதரப்பு தொடர் போலவும், பிசிசிஐ நிகழ்வைப் போலவும் தோன்றியது' என பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் கூறியிருந்தார்.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |