விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்; நோட்டீஸ் அனுப்பிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
விதிகளை மீறியதாக 15 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த 15 வீரர்கள் என்ஓசி எடுக்காமல் அமெரிக்காவில் விளையாடச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசிபி விதிகளின்படி, எந்தவொரு வீரரும் வெளிநாட்டு லீக் அல்லது போட்டியில் விளையாட முதலில் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். ஒரு வீரருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்க மறுத்தால், அந்த வீரர் வாரிய விதிகளுக்கு அப்பால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது.
இந்நிலையில் இந்த முக்கிய விதியை மீறியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதன் 15 வீரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த பாகிஸ்தான் வீரர்கள் பிசிபி என்ஓசி எடுக்காமல் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
Representative Image
தற்போது அமெரிக்காவை தளமாகக் கொண்ட லீக்கில் பல பாகிஸ்தான் வீரர்கள் விளையாடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் மூலம் அவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து 15 வீரர்களுக்கு பிசிபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கிரிக்கெட் பாகிஸ்தானின் அறிக்கையின்படி, பாகிஸ்தானில் இருந்து 15 வீரர்கள் ஹூஸ்டன் ஓபன் போட்டியில் பங்கேற்க சென்றுள்ளனர். இந்த வீரர்களில் சோஹைப் மக்சூத், அர்ஷத் இக்பால், அரிஷ் அலி, ஹுசைன் தலாத், அலி ஷபிக், இமாத் பட், உஸ்மான் ஷென்வாரி, உமைத் ஆசிப், ஜீஷன் அஷ்ரஃப், சைஃப் பதார், முக்தார் அகமது, நௌமன் அன்வர் ஆகியோர் அடங்குவர்.
இவர்களுடன் சமீபத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த சில வீரர்களும் USA Minor League-ல் விளையாடியுள்ளனர்.அவர்களும் பிசிபியிடம் இருந்து அனுமதி பெறவில்லை. இந்த லீக்கில் சல்மான் அர்ஷத், முசாதிக் அகமது, இம்ரான் கான் ஜூனியர், அலி நசீர், ஹுசைன் தலாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உண்மையில், வெளிநாட்டு லீக்குகள் மீதான பாகிஸ்தான் வீரர்களின் மோகத்தால் பாகிஸ்தானின் உள்நாட்டு வீரர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. பாகிஸ்தானில், உள்நாட்டு கிரிக்கெட்டில் A+ பிரிவு வீரர்கள் மாதம் ரூ.85,000 சம்பாதிக்கிறார்கள். சம்பளத்தைப் பொறுத்த வரையில் டி பிரிவு வீரர் ரூ.42,000 பெறுகின்றனர். இதனால்தான் வீரர்கள் வெளிநாட்டு லீக்குகளுக்கு செல்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
PCB, Pakistan Cricket Team, USA minor league, Pakistan Cricket Board, PCB issues show-cause notice