விளையாட்டில் அரசியலை இழுப்பது எதிரானது! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் விமர்சனம்
பாகிஸ்தான் வீரர்களுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்க மறுத்ததை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் விமர்சித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் விளக்கம்
துபாயில் நேற்று நடந்த ஆசியப் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள்
போட்டிக்கு பின்னர், பாகிஸ்தான் அணி வீரர்களுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்காமல் சென்றது கிரிக்கெட் வட்டாரம் மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
அதற்கு காரணமாக, பஹல்காம் தாக்குதலை குறிப்பிட்டு இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்தார்.
மோஷின் நக்வி விமர்சனம்
ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி (Moshin Naqvi) சூர்யகுமார் யாதவ் கைகுலுக்காமல் சென்றதை விமர்சித்துள்ளார்.
அவர் தனது பதிவில், "விளையாட்டு அறம் என்பது இல்லாததை காண்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
விளையாட்டில் அரசியலை இழுப்பது விளையாட்டின் உணர்விற்கு எதிரானது. எதிர்கால வெற்றிகளை அனைத்து அணிகளும் பண்புடன் கொண்டாடுவார்கள் என்று நம்புவோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |