முகப்பரு முதல் குழந்தையின்மை வரை பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் கருப்பைக் கட்டிகளுக்கு ஒரு எளிய சிகிச்சை
பெண்களுக்கு, முகப்பரு முதல் குழந்தையின்மை வரை பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஒரு பிரச்சினை கருப்பைக் கட்டிகள் ஆகும்.
பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் கருப்பைக் கட்டிகள்
Polycystic Ovary Syndrome அல்லது PCOS என்பது, பெண்களை, குறிப்பாக இனப்பெருக்க பருவத்தில் இருகும் பெண்களை பாதிக்கும் ஒரு பரவலான ஹார்மோன் கோளாறு ஆகும்.
இந்த PCOS, பல்வேறு வெளிப்பாடுகள் மற்றும் இனப்பெருக்கம், வளர்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மீதான தாக்கங்களைக் கொண்ட ஒரு சிக்கலான நிலை.
PCOS இல் பலவகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று Classic PCOS என்பதாகும். இந்த பிரச்சினையால் கருப்பையில் சிறிய, திரவம் நிறைந்த பைகள் அல்லது நீர்க்கட்டிகள் உருவாகும்,
இந்த கருப்பைக் கட்டிகள் கருமுட்டை உருவாவதில் குறுக்கிடலாம். மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் இந்த இடையூறு பல்வேறு அறிகுறிகளுக்கும் சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.
இந்த கருப்பைக் கட்டிகளால் குழந்தை பெற்றுக்கொள்ளமுடியாத பெண்களும் இருக்கிறார்கள்.
PCOS பிரச்சினைக்கு என்ன சிகிச்சை?
PCOS அல்லது கருப்பைக் கட்டிகளுக்கான சிகிச்சை என எடுத்துக்கொண்டால், வாழ்வியல் மாற்றம், மருந்துகள் மற்றும் குழந்தையின்மைக்கான சிகிச்சை என பல கட்டங்களிலான சிகிச்சைகள் உள்ளன.
நல்ல விடயம் என்னவென்றால், இயற்கை வைத்தியத்தில் இந்த கருப்பைக் கட்டிகளுக்கு எளிய சிகிச்சை ஒன்று உள்ளது. பாட்டிவைத்தியத்தில், மிளகு, ஜீரகம் முதலான சில எளிய, அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படும் பொருட்களே கருப்பைக் கட்டிகளுக்கு தீர்வாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்லது மூன்று வாரங்களுக்கு தொடர்ச்சியாக மிளகு, ஜீரகம், சுக்கு, திப்பிலி, மஞ்சள் முதலான பொருட்களை எடுத்துக்கொள்வது நல்ல பலனைத் தரும் என்கிறது இயற்கை வைத்திய நூல் ஒன்று.
மிளகையும் ஜீரகத்தையும் தினமும் சாப்பிடுவது கஷ்டம்தான், ஆனால், மிளகும், ஜீரகமும், மஞ்சளும் உள்ள ஒரு உணவுப்பொருள் மிளகு ரசம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை ஜலதோஷம் மற்றும் இருமலுக்காக சாப்பிடுபவர்கள் இன்றும் உண்டு.
ஆக, தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு, மருந்து சாப்பிடுவதாக எண்ணி உணவுடன் மிளகு ரசத்தை சேர்த்து சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்கள் இயற்கை வைத்தியர்கள் சிலர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |