அமைதி என்பதன் பொருள் உக்ரைன் சரணடைவது என்பதல்ல: இமானுவல் மேக்ரான்
உக்ரைன் அமைதி என்பதன் பொருள் உக்ரைன் சரணடைவது என்பதல்ல என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கூறியுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கருத்து
ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று கூறிய ட்ரம்ப், அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
அதற்காக, அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகிறார்.
அவ்வகையில், உக்ரைன் போர் துவங்கி மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நாளான நேற்று, அதாவது, பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் வெள்ளைமாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மேக்ரானுடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்த ட்ரம்ப், இன்னும் சில வாரங்களுக்குள் கூட ரஷ்ய உக்ரைன் போரை முடிக்கமுடியும் என தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
அவரது கூற்றை பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானும் ஆமோதித்தார். மேலும், உக்ரைனுக்கு அமைதிப்படைகளை அனுப்பும் திட்டம் தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இரு தலைவர்களும் தெரிவித்தார்கள்.
அதே நேரத்தில், அமைதி என்பதற்கு, உக்ரைன் சரணடைவது என்பது பொருள் அல்ல என்பதையும் தனது பேச்சில் அடிக்கோடிட்டுக் காட்டினார் மேக்ரான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |